Video: ”நீ விதைத்த வினை எல்லாம்” கேப்டனை பழி வாங்கிய இளம்வீரர்

Published On:

| By Manjula

shreyas iyer direct hit to ben stokes

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இந்த டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் இன்றைய(பிப்ரவரி 5) ஆட்டத்தின் போது, பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை எடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் அவரது பாணியிலேயே அதைக்கொண்டாடி தக்க பதிலடி கொடுத்துள்ளார். நேற்று (பிப்ரவரி 4) இந்திய அணி 2-வது இன்னிங்ஸ் விளையாடும் போது இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களில் அவுட் ஆனார்.

shreyas iyer direct hit to ben stokes

ADVERTISEMENT

டாம் ஹார்ட்லி வீசிய பந்தினை ஸ்ரேயாஸ் தூக்கியடிக்க, அதை சரியாக கணித்த பென் ஸ்டோக்ஸ் பின்னால் ஓடிச்சென்று அபாரமாக கேட்ச் பிடித்தார். அவரது இந்த முயற்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், விமர்சனங்களுக்கும் ஸ்டோக்ஸ் உள்ளானார். பந்தை பிடித்த அவர் ரசிகர்களை நோக்கி ஒற்றை விரலை காட்டியது தான் அதற்கு காரணம்.

shreyas iyer direct hit to ben stokes

ADVERTISEMENT

அதேபோல இன்று ஸ்டோக்ஸ் ரன் எடுக்க ஓடும்போது குறிபார்த்து ஸ்டெம்பை அடித்த ஸ்ரேயாஸ் அவரின் விக்கெட்டை எடுத்ததும், அவர் போலவே நடு விரலைக்காட்டி பழி தீர்த்துக் கொண்டுள்ளார். தற்போது ஸ்ரேயாஸின் இந்த ரன் அவுட் வீடியோவானது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இழுத்து மூடும் நிலையில் காங்கிரஸ் : மக்களவையில் மோடி விமர்சனம்!

‘மெட்டி ஒலி’ 2-வது பாகத்தை இயக்கப்போவது இவர்தான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share