கோப்பையை வென்று கொடுத்த நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை வெளியேற்றியது ஏன் என்கிற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
இது பற்றி வெங்கி மைசூர் கூறுகையில், “எங்கள் அணியின் தக்க வைக்கப்படும் வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இடத்தில் இருந்தார். ஒரு அணி மட்டுமே எந்தெந்த வீரர்களை தக்க வைக்கலாம் என்கிற முடிவை எடுத்து விட முடியாது. அந்த வீரர் அணியில் நீடிக்க விரும்புகிறாரா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் அல்லவா? ஆனால், அவர் தனது மதிப்பை அறிந்து கொள்ள விரும்புகிறார்.
ஒரு வீரர் தனது சந்தை மதிப்பை அறிய விரும்பினால் ஏலத்தில் பங்கேற்பதுதான் சரியான விஷயமாக இருக்கும். அதை அவர் செய்வதும் சரியான விஷயம் தான். வீரர்கள் அவர்களுக்கு வேண்டிய முடிவை எடுப்பதற்கு ஆதரிக்கிறோம். தனிப்பட்ட முறையில் ஸ்ரேயாஸ் ஐயருடன் எனக்கு நல்ல ரிலேஷன்ஷிப் உள்ளது. அதேவேளையில், தனக்கு தேவையான முடிவை எடுப்பதற்கான சுதந்திரமும் அவருக்கு உள்ளது ‘ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக , ஸ்ரேயாஸ் ஐயருக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குறைவான சம்பளம் அளித்து தக்க வைக்க முடிவு செய்ததாகவும், அதனாலயே அவர் ஏலத்தில் பங்கேற்க விரும்பியதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரிஷப் பண்டை விடுவித்துள்ளதால், ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி பக்கம் செல்லவுள்ளதாகவும் தகவல் இருக்கிறது. மேலும், ஸ்ரேயாஸ் ஐயர் 30 கோடி வரை தனக்கு சம்பளம் கேட்டதாகவும் அதற்கான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்கிற தகவலும் உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி அவரை 12.25 கோடிக்கு வாங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
இந்து கோவிலுக்குள் எப்படி செல்லலாம்… ஃபகத் பாசில் செய்தது என்ன?
நம் பேச்சு எப்படி இருக்க வேண்டும்?
Comments are closed.