ஸ்ரீசித்தேஸ்வரா என்டர்பிரைசஸ் சார்பில் தயாராகும் படம் ‘கப்ஜா’.
இந்தப் படத்தில் வெவ்வேறு கதைகளங்களில் நடித்துவரும் கன்னட நடிகர்கள் உபேந்திரா, சுதீப் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாயகியாக ஸ்ரேயா ஷரண் நடிக்கிறார். ஆர்.சந்துரு இயக்குகிறார். ‘கப்ஜா’ இவர் இயக்கும் 12ஆவது படம்.
கன்னடத்தில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் வெளியாகி வெற்றிபெற்ற கே.ஜி.எஃப் படம் அதன் பிரமாண்டத்தால் பேசப்பட்டது. அதில் பணியாற்றிய பலரும் இதிலும் பங்கேற்றுள்ளனர்.
கே.ஜி.எஃப் படத்தை போல் இருமடங்கு பெரிதாக இந்தப் படம் உருவாக உள்ளதாக கூறுகிறார் இயக்குநர். இந்தப் படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா பெங்களூரில் மோகன் பி கரே ஸ்டுடியோவில் நடைபெற்றது.
கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒரியா,மராத்தி, இந்தி என ஏழு மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. நிழலுலக அரசனாக உபேந்திரா நடிக்க ராணியாக ஸ்ரேயா நடிக்கிறார்.
ஏழு மொழிகளில் உருவாகும் இந்தப் படம் தமிழிலும் பேசப்படும் வகையில் அமையும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது படக்குழு.
**-இராமானுஜம்**
ஏழு மொழிகளில் ஸ்ரேயா
Published On:
| By admin
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
