இலங்கையில் ஈழத் தமிழரை அழிக்க முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு உதவிய காங்கிரஸ் கட்சியுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்க முயற்சிக்கலாமா? என நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
தவெக தலைவர் விஜய் குறித்து இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே அளித்த பேட்டி சர்ச்சையாகி உள்ளது. விஜய்க்கு நாமல் ராஜபக்சே அறிவுரை வழங்க தேவை இல்லை என்று தவெக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகளில் ஒருவரான இடும்பாவனம் கார்த்திக், “ராஜபக்சே தலைமையிலான சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு பணமும், ஆயுதமும் கொடுத்து, சர்வதேச அணிசேர்க்கையை உருவாக்கி, எல்லாவிதத்திலும் உதவி, பின்புலமாக இருந்தது சோனியா காந்தி தலைமையிலான காங்கிரசு கும்பல். அந்தக் காங்கிரசு கட்சியோடு கூட்டணி வைக்க தவெக முயற்சிப்பது ஏன்?” என தமது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.
