கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – வயதாக ஆக உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டுமா?

Published On:

| By Minnambalam

ஒருவர் சாப்பிடும் உணவுக்கும் வயதுக்கும் அளவுக்கு அளவுகோல் ஏதும் உண்டா என்கிற கேள்வி நிறைய பேர் மனத்தில் நிறைந்துள்ளது.

அதே நேரம் வயதாக ஆக மிகக் குறைந்த அளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடுகிறது என்கின்றனர் சிலர். இந்த நிலையில் வயதாக ஆக உணவைக் குறைக்க வேண்டுமா?

ADVERTISEMENT

“எனக்கு  வயசாகிட்டே வருதே என்று அலறவோ, பயப்படவோ தேவையில்லை. நாற்பது வயதிலிருந்து நம்முடைய உடல் உட்கட்டமைப்பின் செயல்பாடுகள் ‘பேஷல் மெட்டபாலிக் ரேட்’ (பி.எம்.ஆர்) குறையத் தொடங்குவது நிஜம்தான்.

அதற்காகத்தான் அந்த நாள்ல நம்ம முன்னோர்கள் ‘செவ்வாய், வெள்ளிக்கிழமைகள்ல கோயில் குளத்துக்குப் போய் சுத்திட்டு வாங்க’னு சொன்னாங்க.

ADVERTISEMENT

ஒரு பொழுது விரதம், உண்ணாநோன்பு, பத்தியச் சாப்பாடு, அசைவம் தவிர்த்தல்னு கத்துக்கொடுத்தாங்க. ஆனா, நாம அதெல்லாத்தையும் காத்துல பறக்க விட்டுட்டோம்.

பொதுவாகவே வயதாக ஆக செரிமானம் ஆவதிலும், உடல் திறனும் குறையத் தொடங்கும். அதுக்கேத்த உணவுகளை உண்டு, தேவையான உடற்பயிற்சிகளைச் செய்தால் இந்தப் பிரச்சினையை சுலபமா சமாளிக்கலாம்.

ADVERTISEMENT

இப்ப நம்ம வாழ்க்கை முறையும் ரொம்பவே மாறி, ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம் வந்துடுச்சு. அவசர வாழ்க்கைதான் வாழறோம்.

ஆனா, அதுக்கேத்த மாதிரி முறையான திட்டமிடல் இல்லை. அதனாலதான் ஓவர் வெயிட், சர்க்கரை வியாதி, ஹைப்பர் டென்சன், ஹார்ட் அட்டாக்னு வியாதிகள்.

பத்து வயசு குழந்தைகூட 60 கிலோ ஓவர் வெயிட்டோட வந்து, உடம்பு மெலிய சிகிச்சை எடுக்குற நிலைமை இருக்கு.

பெண்களைப் பொறுத்தவரை 40 வயசைத் தாண்டிய பிறகுதான் மாதவிடாய் பிரச்னைகள், ஹார்மோன், இதயம், எலும்பு சம்பந்தமான பிரச்சினைங்க எல்லாம் தலைதூக்கும். அந்தசமயத்துல உடல் எடை அதிகரிச்சுடாமப் பாத்துக்கிறது ரொம்ப முக்கியம்.

நாலு பேர் உள்ள குடும்பத்துக்கு ஒரு மாசத்துக்கு இரண்டு லிட்டர் எண்ணெய்தான் பயன்படுத்தணும். அதாவது ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 15 மில்லி ஆயில் போதுமானது.

அதே மாதிரி டீ, காபியிலயும் கவனமா இருக்கணும். ஒரு நாளைக்கு காலை, மாலைனு ரெண்டு முறை டீ அல்லது காபி எடுத்துக்கலாம். டிபன் சாப்பிட்டதும் டீ சாப்பிடுற பழக்கம் தவறானது.

வயதானவங்களுக்கு கால்சியம் சத்து தேவை. அதனால 2.5% முதல் 3.5% அளவு கொழுப்புச்சத்து உள்ள பால் ஒரு கப் அளவுல எடுத்துக்கணும். பாலுக்கு பதிலா, தயிர், மோர்னு கூட சாப்பிடலாம்.

டீ, காபியில் பால் கலந்தாலும், பாலில் உள்ள கால்சியம் மட்டும் கெட்டுப் போயிடும். மற்ற சத்துக்கள் அப்படியேதான் இருக்கும். இப்போ, ஓட்ஸ் சாப்பிடுறது, ஒரு ஃபேஷன் மாதிரி ஆயிடுச்சு. ‘ஓட்ஸ் சாப்பிட்டா உடம்பு இளைக்கும்’னு நெனைக்கிறாங்க. அதுவும் தப்பு.

ஓட்ஸை ரொம்ப குறைவான அளவுதான் எடுத்துக்கணும். ஃபாரின்ல ‘ரோல்டு ஸ்டீல் கட்டிங்’ பண்ணின ஓட்ஸ் சாப்பிடுறாங்க.

நம்ம நாட்டுல ‘ஈசி குக்கிங்’ காக உடைச்ச ஓட்ஸ்தான் விற்பனைக்குக் கிடைக்குது. இதைச் சாப்பிட்டா, கலோரி அளவு கூடும்” என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

பசலைக்கீரை கபாப்

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: வெள்ளைச் சர்க்கரைக்கு பதில் நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி.. எது சிறந்தது?

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share