உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை நீதிமன்றத்திற்குள் காலணி வீசித் தாக்க முயன்ற வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் மீது நேற்று காலணி வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தவர் பி.ஆர்.கவாய். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணை நடந்து வந்த நிலையில் 71 வயதான ராகேஷ் கிஷோர் என்ற வழக்குரைஞர் திடீரென காலில் அணிந்திருந்த காலணியை எடுத்து வீச முயன்றார்.
அப்போது காலணி நீதிபதி மீது படாமல் கீழே விழுந்தது உச்ச நீதிமன்ற அறையில் நிகழ்ந்த இந்த அசம்பாவிதங்களை பொருட்படுத்தாமல் பி.ஆர்.கவாய் இது போன்ற சம்பவங்கள் என்னை ஒருபோதும் பாதிக்காது விசாரணையை தொடருங்கள் என்று மீண்டும் தனது பணியை தொடங்கினார். இந்த வழக்கில் ராகேஷ் கிஷோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் நேற்று டெல்லி கார்கர் டுமா நீதிமன்ற வளாகத்தில் ராகேஷ் கிஷோர் மீது சக வழக்கறிஞர்கள் காலணி வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறும்போது, “பி.ஆர் கவாய் மீது காலணி வீசியதற்கு தான் தண்டனை தருகிறேன் எனக் கூறி தன்னை காலணியால் தாக்கினர். நாங்கள் அதற்கு எதிராக சனாதான முழக்கங்களை எழுப்பினோம் என தெரிவித்துள்ளார்.
