ராமதாஸ் அனுமதி இல்லாமல் கையெழுத்து- அன்புமணி மீது திடுக்கிடும் புகார்

Published On:

| By Minnambalam Desk

PMK Anbumani Ramadoss

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அனுமதி இல்லாமல் அவரது கையெழுத்துடன் பாமக உறுப்பினர் அட்டையை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Shocking Allegation Against Anbumani:

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையேயான மோதல் நீடித்து வருகிறது. பாமகவில் 20க்கும் மேற்பட்ட அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் அடுத்தடுத்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே, நீக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பதவியில் நீடிப்பதாக அன்புமணி அறிவித்து வருகிறார்.

ADVERTISEMENT

இதனிடையே சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் தமது ஆதரவாளர்களுடன் அன்புமணி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாமகவின் புதிய உறுப்பினர் அட்டையை வெளியிட்டார் அன்புமணி.

இந்த புதிய பாமக உறுப்பினர் அட்டையின் முகப்பு பக்கத்தில் ராமதாஸ் படமும் பின்பக்கத்தில் அன்புமணி படமும் இடம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

அதேநேரத்தில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என ராமதாஸ் கையெழுத்தும்.
தலைவர் அன்புமணி என அன்புமணி கையெழுத்தும் இந்த உறுப்பினர் அட்டையில் இடம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

இந்த புதிய உறுப்பினர் அட்டைதான் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியவர் ராமதாஸ்; ஆனால் அன்புமணி தலைவர் என குறிப்பிடும் இந்த உறுப்பினர் அட்டையில் ராமதாஸ் கையெழுத்து எப்படி இடம் பெற்றிருக்க முடியும்? என்பது அவரது ஆதரவாளர்களின் கேள்வி.

மேலும் ராமதாஸின் கையெழுத்தை அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்தி இந்த புதிய உறுப்பினர் அட்டையை அன்புமணி உருவாக்கி இருக்கிறார் என்றும் ராமதாஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share