இளையப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில் வனிதா விஜயகுமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Shivaratri song Ilayaraja case
நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குநர் ராபர்ட் ஆகியோரது நடிப்பில் வெளியான திரைப்படம் மிஸஸ் & மிஸ்டர். இந்த படத்தில் மைக்கல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்றிருந்த சிவராத்திரி என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா.
இந்நிலையில் தன்னுடைய அனுமதியின்றி இந்த பாடலை பயன்படுத்தியிருப்பதாகவும், இது காப்புரிமை மீறிய செயல் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இன்று (ஜூலை 14) விசாரணைக்கு வந்தது.
அப்போது, ” மிசஸ் &மிஸ்டர் படத்தில் அனுமதியின்றி தனது பாடலை பயன்படுத்தியதோடு, அந்தப் படத்தின் விளம்பரங்களில் தனது பெயரும் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அதற்கும் தடை விதிக்க வேண்டும்” என்று இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது.
வனிதா விஜயகுமார் தரப்பில், “இந்த பாடலை எக்கோ நிறுவனத்தின் அனுமதியை பெற்றுதான் பயன்படுத்தினோம். இளையராஜாவுக்கும் எக்கோ நிறுவனத்துக்கும் இடையேயான காப்புரிமை வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது” என்று வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, இவ்வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்புத் தெரிவித்தார்.
மேலும் வனிதா விஜயகுமார் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். Shivaratri song Ilayaraja case
