‘GHOST’-ஆக மிரட்டும் சிவராஜ்குமார்: கன்னட சினிமா யுனிவெர்ஸ் ரெடி!

Published On:

| By Monisha

shivarajkumars ghost trailer

கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுபவர் நடிகர் சிவராஜ்குமார். சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழ்நாட்டில் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அண்மையில், நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியதாலும் பலர் இவரை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “கேப்டன் மில்லர்” படத்திலும் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ADVERTISEMENT

தற்போது சிவராஜ்குமார் நடிப்பில் இயக்குனர் ஸ்ரீனி இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகியுள்ள கன்னட படம் “கோஸ்ட்”. இந்த படம் தசரா பண்டிகை முன்னிட்டு வெளியாகும் எனப் படக்குழு ஜூலை மாதமே Big Daddy என்ற Glimpse வீடியோவை வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், கோஸ்ட் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கோஸ்ட் படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

ADVERTISEMENT

https://twitter.com/dhanushkraja/status/1708353697074586056

பக்கா ஆக்சன் பேக் கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கும் சிவராஜ்குமாரின் கோஸ்ட் படத்தில் ஒரு செம ட்விஸ்ட் வைத்திருக்கிறாராம் இயக்குனர்.

ADVERTISEMENT

அது என்னவென்றால், 2019 ஆம் ஆண்டில் வெளியான “பீர்பால் ட்ரைலாஜி” படத்தின் இரண்டாம் பாகத்திற்கான லிங் இந்த கோஸ்ட் படத்தில் உள்ளதாம். இந்த தகவலை படக்குழுவினரே அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். தமிழில் LCU, ஹிந்தியில் Spy Universe போன்று கன்னடத்தில் ஸ்ரீனி ஒரு தனி யுனிவர்ஸை உருவாக்க முடிவு செய்திருக்கிறாராம்.

கோஸ்ட் படத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், டீ-ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி நடிகர் சிவராஜ்குமாரை 25 வயது இளைஞராக காட்டியுள்ளனர். அந்த சில காட்சிகள் டிரெய்லரிலும் இடம் பெற்றுள்ளது. 25 வயது இளைஞராக சிவராஜ்குமாரின் லுக்கை பார்த்தவுடன் நிச்சயமாக அவரின் ‘ஆல் டைம் பிளாக் பஸ்டர்’ படமான “ஓம்” படம் அனைவரின் நினைவிற்கும் வரும்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’தலைவர் 170’: மீண்டும் ரஜினி – அனிருத் மேஜிக்..!

ஆசிய போட்டிகள் 2023: புதிய சாதனை படைத்த அதிதி அசோக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share