அந்த ரெண்டு பேரும் ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணிட்டாங்க: ராகுல் டிராவிட்

Published On:

| By Manjula

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இரண்டு வீரர்கள் தன்னை மிகவும் கவர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

வருகின்ற ஜூன் மாதம் தொடங்கப்போகும் டி2௦ உலகக்கோப்பை அணியில் இடம் பெறப்போகும் அந்த 15 வீரர்கள் யார்? என்பது தான் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

ADVERTISEMENT

கேப்டன் ரோஹித் சர்மா ஆடுகளத்தின் சூழ்நிலை, வீரர்களின் திறன் ஆகியவற்றை பொறுத்தே வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

இடையில் ஐபிஎல் தொடர் வருவதால் இதனை வைத்தும் வீரர்களை தேர்வு செய்யலாம் என பிசிசிஐ தேர்வுக்குழு காத்திருக்கிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சமீபத்தில் அளித்த பேட்டியில் சிவம் துபே, ரவி பிஷ்னோய் இருவரும் தன்னை மிகவும் கவர்ந்து விட்டதாக தெரிவித்து இருக்கிறார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர், ”ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது டி2௦ போட்டியில் சிவம் துபே நன்றாக ஆடினார். சுழலுக்கு எதிராக ஸ்கோர் செய்த அவர் பந்துவீச்சிலும் அசத்தினார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடர் நாயகன் விருதை வென்றது அவருக்கு நம்பிக்கையை அளித்திருக்கக்கூடும். இதேபோல ஐபிஎல் தொடரிலும் தன்னுடைய திறமையை அவர் வெளிக்காட்டுவார் என நம்புகிறேன்.

அதேபோல ரவி பிஷ்னோய் 2-வது சூப்பர் ஓவரில் சிறப்பாக இரண்டு பந்துகளை வீசினார். அவர் சரியாக கணித்து போடாமல் இருந்திருந்தால் அவர்கள் கண்டிப்பாக சிக்ஸர்கள் அடித்திருப்பர்.

11 ரன்கள் தேவைப்பட்ட சூழ்நிலையில் இரண்டு ஆப்கான் வீரர்களையும் அவுட் ஆக்கி வெற்றியை உறுதி செய்தார்,” என புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

இதை வைத்து பார்க்கும்போது கண்டிப்பாக இருவருக்கும், டி2௦ உலகக்கோப்பை தொடரில் இடம் கிடைக்கும் என்பது தெரிகிறது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விடாமுயற்சி: ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு?

திமுக இளைஞரணி மாநாட்டு சுடர் – ஸ்டாலினிடம் வழங்கிய உதயநிதி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share