முகநூல் நேரலையில் சிவசேனா கட்சி தலைவரின் மகன் சுட்டுக் கொலை!

Published On:

| By christopher

Shiv Sena party leader's son shot dead on Facebook live

முகநூல் நேரலையில், உத்தவ் சிவசேனா கட்சி தலைவரின் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா  கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ஆன வினோத் கோசல்கரின் மகன் அபிஷேக் கோசல்கர்.

இவர் மவுரிஸ் பாய் என்று பிரபலமாக அறியப்படும் மொரிஸ் நோரோன்ஹாவின் அலுவலகத்திற்கு நேரலை நிகழ்ச்சிக்காக நேற்று அழைக்கப்பட்டிருந்தார்.

அதன்படி நேற்று (பிப்ரவரி 8) இரவு நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிஷேக் கோசல்கர் மீது மூன்று முறை மொரிஸ் நோரோன்ஹா துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு மொரிஸூம் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அபிஷேக் கோசல்கரை உயிருக்கு ஆபத்தான நிலையில் போரிவலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அபிஷேக் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மொரிஸ் ஏன் அபிஷேக் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

எனினும் பக்கத்து வீட்டுக்காரர்களான இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று வழக்குப்பதிவு செய்துள்ள MHB காலனி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பயங்கரமானது!

இதுகுறித்து உத்தவ் தாக்கரேவின் மகனும், மாநில முன்னாள் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே கூறுகையில், “மகாராஷ்டிரா மாநிலம் இதுவரை இதுபோன்ற சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதை கண்டதில்லை. இதனைப் பார்க்கும்போது அதிர்ச்சியாகவும், மயக்கமாகவும் இருக்கிறது. சாமானியனைப் பாதுகாக்க ஏதாவது ஒரு வழிமுறை இருக்கிறதா? நீங்கள் சட்டத்திற்கு பயப்படுகிறீர்களா? நிர்வாகமும் அமைப்பும் முற்றிலுமாக சிதைந்துவிட்டன! இது பயங்கரமானது!” என்று தெரிவித்துள்ளார்.

ராஜினாமா செய்ய வேண்டும்!

இந்த நிகழ்வுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வர் பட்னாவிஸும் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அக்கட்சியை சேர்ந்த எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

அவர், “மகாராஷ்டிராவில் குண்டர்களின் ஆட்சி நடப்பதாக நான் தினமும் கூறி வருகிறேன். முதலமைச்சர் தினமும் குண்டர்களை சந்தித்து கட்சியில் சேர்த்துகொள்கிறார்கள். அரசு குண்டர்களின் கையில் சிக்கியுள்ளது. அபிஷேக் கோசல்கர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது அதிர்ச்சியளிக்கிறது. உள்துறை அமைச்சரான ஃபட்னாவிஸ் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரும் ஏக்நாத் ஷிண்டேவும் உடனடியாக தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்“ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

உல்ஹாஸ்நகரில் உள்ள காவல் நிலையத்திற்குள் ஏக்நாத் ஷிண்டே பிரிவு தலைவரான மகேஷ் கெய்க்வாட் மீது பாஜக எம்எல்ஏ சமீபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோப ஜெமா

உயிரிழந்த எஜமானர்… உடல் அருகே 48 மணி நேரம் காத்து உதவிய நாய்!

தமிழகத்தில் பறவைகளின் எண்ணிக்கை: ஆச்சரியத் தகவல்!

ஹமாஸின் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு மாயை: இஸ்ரேல் பிரதமர்!

சென்னையில் ஒலி மாசுபாடு : பேராபத்தை எச்சரிக்கும் சென்னை ஐ.ஐ.டி ஆய்வு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share