நடிகை ஷில்பா ஷெட்டி மும்பையில் உள்ள தனது புகழ் பெற்ற உணவகத்தை மூடி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மும்பையில் கடந்த 2016ம் ஆண்டு புகழ் பெற்ற பாஸ்டியன் பாந்த்ரா என்ற உணவகத்தை தொடங்கி நடத்தி வந்தார். இந்த உணவகம் கடல் வாழ் உணவுகளுக்கு பெயர் பெற்று விளங்கியது.
இந்நிலையில் ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் மும்பை தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவரிடம் 2015-ம் ஆண்டில் இருந்து 2023 காலகட்டங்களில் ரூ.60.48 கோடி பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த பணத்தை ஷில்பா ஷெட்டி மோசடி செய்தாக புகார் எழுந்தது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஷில்பா ஷெட்டி தனது உணவகத்தை மூடுவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகை ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாவில் மும்பையின் முக்கியத்துவம் வாய்ந்த பாஸ்டியன் பாந்த்ரா வியாழக்கிழமையுடன் மூடப்படுகிறது. இந்த இடம் எண்ணிடலங்கா மறக்க இயலாத இரவுகளையும் தந்திருக்கிறது. நகரத்தின் இரவு வாழ்க்கையை வடிவமைத்த தருணங்களை தந்த இந்த இடம் இப்போது விடைபெறுகிறது.
இந்த இடத்தை கௌரவிக்கும் வகையில் செய்யும் வகையில் ஒரு சிறப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதில், பாஸ்டியன் உணவகத்திற்கு நெருக்கமான நபர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். பாஸ்டியன் பாந்த்ராவுக்கு விடை கொடுத்தாலும், ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடக்கும் ஆர்கான் நிகழ்ச்சி, பாஸ்டியன் அட் தி டாப்பில் தொடரும். புதிய இடத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

