இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது மகன் பிறந்தநாளை ஒட்டி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு முதன்முதலாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் மூலம் ஷிகர் தவான் இந்திய அணிக்காக விளையாட ஆரம்பித்தார்.
தொடர்ந்து டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து விதமான போட்டிகளிலும் அதிரடியாக விளையாடினார்.
மேலும், டெல்லி, மும்பை, பஞ்சாப் அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளிலும் ஷிகர் தவான் ஆடியுள்ளார். இந்தநிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷிகர் தவான் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு தனது மனைவி ஆயிஷா முகர்ஜியை ஷிகர் தவான் விவாகரத்து செய்தார். அவருக்கு சோராவர் என்ற மகன் உள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக தவான் தனது மகனை பார்க்கவில்லை.

இந்தநிலையில், தனது மகனின் 10-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
“எவ்வளவு தூரமாக இருந்தாலும், நம்மால் இணைய முடியாவிட்டாலும் நீ எப்போதும் என் இதயத்தில் தான் இருக்கிறாய். இந்த ஆண்டு அன்பு மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். சோரா பேட்டா” என்று உணர்ச்சிகரமாக பதிவிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிறுமி டானியா நினைவிருக்கிறதா? – ஸ்டாலின் கொடுத்த பரிசு!
அண்ணா பல்கலை மாணவி வழக்கு: திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா?: டிஜிபி முக்கிய அறிவிப்பு!