ஆர்.சி.பி அணிக்கு எதிரான சென்னை அணியின் தோல்வியை அடுத்து தோனியை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். shewag criticize ms dhoni batting lineup
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மார்ச் 28) எதிர்கொண்ட பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
17 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் பெற்ற வெற்றியை ஆர்.சி.பி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதே வேளையில் 9 வீரராக களமிறங்கி 16 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 30 ரன்கள் குவித்த சென்னை அணியின் மூத்த வீரரான தோனி மீது முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனம் முன் வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக முன்னாள் வீரர் சேவாக் கூறுகையில், “அவர் மிகவும் சீக்கிரமாக களமிறங்கிவிட்டார் என்று நினைக்கிறேன். அவர் பேட்டிங் செய்ய நேற்று களமிறங்கியபோது, 16வது ஓவர் வீசப்பட்டது. அவர் வழக்கமாக எட்டு முதல் பத்து பந்துகள் மீதமுள்ளபோது களமிறங்குவார். ஆனால் நேற்று அவர் சீக்கிரமாக களமிறங்கிவிட்டார் என்று நினைக்கிறேன்” என நக்கலாக விமர்சித்துள்ளார்.
அதே போன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு சென்னை அணியின் முன்னாள் வீரர் வாட்சன் அளித்த பேட்டியில், “சிஎஸ்கே ரசிகர்கள் தோனி முன்னதாக களமிறங்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் – தோனி 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். அவர் மேல் வரிசையில் வருவதை நான் மிகவும் விரும்பினேன். அவர் அஸ்வினை விட முன்னதாகவே பேட்டிங் செய்திருக்க வேண்டும். அப்படி வந்திருந்தால் ஆட்ட சூழ்நிலை மாறியிருக்கும்” என வாட்சன் தெர்வித்துள்ளார்.