Share market: இன்று விடுமுறை… இந்த வாரத்துக்கான பங்குகள் என்னென்ன?

Published On:

| By Kavi

நாடாளுமன்ற தேர்தல் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு காரணமாக மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) மற்றும் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) ஆகியவை மே 20 இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது இந்த மாதத்தின் இரண்டாவது விடுமுறை ஆகும். மே 1,1960 அன்று மகாராஷ்டிரா மாநிலம் நிறுவப்பட்டதை நினைவுகூறும் வகையில், மகாராஷ்டிரா தினம் அனுசரிக்கப்பட்டதன் காரணமாக இந்த மாதம் மே 1 அன்று சந்தை விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 24-25 நிதியாண்டில் தொழில்நுட்ப தயாரிப்பு நிறுவனங்களில் 43,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ONGC, SAIL, BHEL, JK Tyre, One97 Communications, Power Grid, InterGlobe Aviation, ITC மற்றும் NTPC ஆகிய நிறுவனங்கள் இந்த வாரம் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டு முடிவுகளை அறிவிக்கின்றன.

கடந்த வாரம் பிஎஸ்இ பெஞ்ச்மார்க் 1,341.47 புள்ளிகளும் நிஃப்டி 446.8 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்தது. கணிசமான அளவு சந்தை உயர்வுடன் முடிவடைந்த நிலையில் தேசிய பங்குச்சந்தையில் உள்ள முதல் 8 நிறுவனங்கள் சுமார் 1,47,935.19 கோடி அளவுக்கு சந்தை மதிப்பு உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு 40,163.73 கோடி உயர்ந்து 6,16,212.90 கோடியை எட்டியது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 36,467.26 கோடி உயர்ந்து அதன் சந்தை மதிப்பை 19,41,110.70 கோடியாக உள்ளது.

Stock Market today: BSE Sensex, Nifty advance as retail inflation eases in April | Markets News - News9live

பார்தி ஏர்டெல்லின் சந்தை மூலதனம் 26,492.61 கோடி உயர்ந்து 7,64,917.29 கோடியாக உள்ளது.

HDFC வங்கியின் சந்தை மதிப்பு 21,136.71 கோடி உயர்ந்து 11,14,163.29 கோடியாக உள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் மதிப்பு 9,570.68 கோடி உயர்ந்து 7,94,404.51 கோடியாக உள்ளது.

இன்ஃபோசிஸ் 7,815.51 கோடி அதிகரித்து 5,99,376.39 கோடியை எட்டியது.

ஐடிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4,057.54 கோடி உயர்ந்து 5,44,895.67 கோடியாக உயர்ந்துள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2,231.15 கோடி உயரந்து 7,32,576.77 கோடியாக உள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) மிட்கேப் சந்தை மதிப்பு 16,588.94 கோடி குறைந்து 13,92,963.69 கோடியாக உள்ளது.

ஹிந்துஸ்தான் யூனிலீவரின் மிட் கேப் சந்தை மதிப்பு 6,978.29 கோடி குறைந்து 5,46,843.87 கோடியாக உள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான பங்குச் சந்தை விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டது செபி-

மே 20 – பொதுத் தேர்தல்
ஜூன் 17- பக்ரீத்
ஜூலை 17- முஹர்ரம்
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
அக்டோபர் 2- காந்தி ஜெயந்தி
நவம்பர் 1- தீபாவளி
நவம்பர் 15- குருநானக் ஜெயந்தி
டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மணியன் கலியமூர்த்தி

வேலைவாய்ப்பு: மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் பணி!

ஹெல்த் டிப்ஸ்: ஓய்வில்லாமல் உழைப்பவரா நீங்கள்? வெயிட் ப்ளீஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share