தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜீவால் இன்றுடன் பணி ஓய்வு பெறும் நிலையில் தீயணைப்பு ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனராக சங்கர் ஜிவால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பதவியேற்றார். அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 31ஆம் தேதி உடன் நிறைவடைய உள்ளது
இதற்கிடையில் காவல்துறை ஆணையம் போல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு புதிய ஆணையம் ஒன்றை ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு தீ ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் சங்கர் ஜிவால் தீயணைப்பு ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே நமது மின்னம்பலத்தில் சங்கர் ஜுவால் இந்த பதவியில் நியமிக்கப்படுவார் என்று “ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு காத்திருக்கும் ‘அந்த’ புதிய பதவி!” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படி, சங்கர் ஜுவாலுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பட்டாசு விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு பொருள் இழப்பு மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில் விபத்துகள் மற்றும் பேரழிவு தீ விபத்துகளை முற்றிலும் தடுப்பதற்கான வழிமுறைகளை இந்த ஆணையம் வழங்கும். மேலும் தீ தடுப்பு முறைகளில் புதுமைகளை புகுத்தவும், தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் உரிய பயிற்சி அளிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் புதிய தீ ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
