இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அசிடிட்டி பிரச்சனை காரணமாக, சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை இன்று (நவம்பர் 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சக்திகாந்த தாஸ் நேற்று (நவம்பர் 25) இரவு அசிடிட்டி பிரச்சனை காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக இருக்கிறார். விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வலுத்த எதிர்ப்பு… பொங்கல் அன்று நடைபெற இருந்த சி.ஏ தேர்வு தேதி மாற்றம்!