ரசிகரை தாக்க முயன்ற ஷகிப் அல் ஹசன்: காரணம் என்ன? ஷாக் வீடியோ!

Published On:

| By Selvam

கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் வங்கதேச அணிக்காக விளையாடி வரும் ஷகீப் அல் ஹசன், 67 டெஸ்ட், 247 ஒருநாள் போட்டி, 117 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். வங்கதேச அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக ஷகீப் அல் ஹசன் உள்ளார்.

இந்தநிலையில், தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரை ஷகீப் அல் ஹசன் தாக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், ஷகீப் தனது சக வீரர்களுடன் மைதானத்தில் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது மைதானத்திற்குள்ளே புகுந்த அவரது ரசிகர் ஒருவர், ஷகீப்புடன் செல்ஃபி எடுக்க முயன்றார்.

இதனையடுத்து ரசிகரின் கையில் இருந்த மொபைல் போனை பிடுங்க முயன்ற ஷகீப், அவரது கழுத்தைப் பிடித்து அடிக்க முயன்றார். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது.

தொடர்ந்து அந்த ரசிகர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஷகீப் அல் ஹசன் மைதானத்தில் இப்படி கோபமாக நடந்து கொள்வது இது முதல்முறை அல்ல. முன்னதாக கடந்த 2021-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் டாக்கா பிரிமீயர் டி20 கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்றது.

இதில், ஷகிப் அல் ஹசன் தலைமையிலான மோஹம்மதான் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் அபஹானி லிமிட்டெட் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.

அப்போது வங்கதேச அணியின் சக வீரரான முஸ்தபிசுர் ரகுமானுக்கு, ஷகிப் பந்து வீசினார். அப்போது அம்பயரிடன் ஷகீப் எல்பிடபிள்யூ கேட்க, அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ஷகீப் அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஸ்டெம்புகளை உதைத்தார். அவரது இந்த செயலுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் தான் ஷகீப் மீண்டும் மைதானத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரை தாக்க முயன்ற சம்பவம் மீண்டும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அம்பானி, அதானியை பற்றி ஏன் பேசுவதில்லை… என்ன டீலிங் நடந்தது? : ராகுலுக்கு மோடி கேள்வி!

குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்: குளிர்விக்க வருகிறது கோடைமழை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share