Jyothika: ரூபாய் 100 கோடியை வசூல் செய்தது ‘சைத்தான்’

Published On:

| By Manjula

shaitaan is at 100 crore and counting

பாலிவுட்டில் ‘சூப்பர் 30’, ‘கன்பத்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விகாஸ் பால். இவரது இயக்கத்தில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி ‘சைத்தான்’ திரைப்படம் வெளியானது.

இந்த படத்தில் அஜய் தேவ்கன், ஜோதிகா, மாதவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குஜராத்தி மொழியில் வெளியான ‘வாஷ்’ என்ற படத்தின் ரீமேக்காக தான் ‘சைத்தான்’ வெளியாகி இருக்கிறது.

ADVERTISEMENT

கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பின் ‘சைத்தான்’ படம் மூலமாக ஜோதிகா இந்தி சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருந்ததால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதன் காரணமாக இந்த படம் வெளியான முதல் நாளிலேயே 14.75 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாள் 18.75 கோடி ரூபாய் வசூல் செய்தது. மேலும் மூன்றாவது நாளில் 20.5 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது.

இந்நிலையில் ‘சைத்தான்’ படம் வெளியான ஏழு நாட்களில் உலக அளவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ADVERTISEMENT

இந்த ஆண்டில் இந்தி திரையுலகில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த 3-வது திரைப்படம் மற்றும் உலக அளவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த 7-வது இந்திய திரைப்படம் என்ற பெருமையை ‘சைத்தான்’ படம் பெற்றுள்ளது.

‘சைத்தான்’ படத்தின் வெற்றியால் ஜோதிகாவிற்கு இந்தி பட வாய்ப்புகளும் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்தியில் அடுத்ததாக ஶ்ரீ மற்றும் தபா கார்டெல் ஆகிய படங்கள் ஜோதிகா நடிப்பில் வெளியாகவிருக்கின்றன.

-கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Ranji Trophy: 42-வது முறையாக கோப்பையை முத்தமிட்டது மும்பை அணி!

Heatwave: இந்த ‘மாவட்டத்துல’ தான் சூரியன் ரொம்ப உக்கிரமா இருக்காம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share