IPL 2024 Final: சேப்பாக்கம் மைதானத்தில் “CSK, CSK” என கோஷமிட்ட ஷாருக்கான்

Published On:

| By indhu

Shahrukh Khan chanted “CSK... CSK... CSK” in the stadium!

ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களுடன் சேர்ந்து “CSK… CSK… CSK..” என நடிகர் ஷாருக் கான் கோஷமிட்ட காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி:

ஐபிஎல் 2024 தொடருக்கான இறுதிப்போட்டி நேற்று (மே 26) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, 18.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஐதராபாத் அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.3 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை எடுத்து சுலபமாக ஐதராபாத் அணியை வீழ்த்தி, ஐபிஎல் 2024 கோப்பையை கைப்பற்றியது.

வீரர்கள் கொண்டாட்டம்:

ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஐபிஎல் கோப்பையை வாங்கிய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அணி வீரர்களும் கோப்பையுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து, அணியில் விளையாடிய வீரர்கள், பயிற்சியாளர்கள், அணியில் உள்ள பிற உதவியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என அனைவரும் வெற்றிக் கொண்டாடங்களில் ஈடுபட்டனர்.

இந்த இறுதிப்போட்டியை காண கொல்கத்தா அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், நடிகருமான ஷாருக்கான் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்திருந்தார். கொல்கத்தா அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மைதானத்திற்குள் நுழைந்த ஷாருக்கான் வீரர்களை அணைத்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

“CSK… CSK… CSK…” கோஷம்:

ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், ஷாருக்கான் கொல்கத்தா அணி வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருந்தார்.

அப்போது மைதானத்தில், “சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் போடு” என்ற பாடல் ஒலிக்கப்பட்டது. அதனைக் கேட்டதும் மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் “CSK… CSK… CSK..” என்று கோஷமிட்டனர்.

இதனைக் கேட்ட ஷாருக்கான் ரசிகர்களை பார்த்து திரும்பி அவரும், “CSK… CSK… CSK” என கோஷமிட்டார். இதுத்தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஷாருக்கான், கேகேஆர் அணிக்கு அடுத்து அதிகம் பிடித்த அணி சிஎஸ்கே என பேட்டிகளில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜாமீனை நீட்டிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு!

‘மாயி’ சூர்யபிரகாஷ் மறைவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share