பாலியல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடத்தி விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் நீதிபதி புஷ்பராணி இன்று (ஜூன் 16) தீர்ப்பு வழங்கினார். முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் , 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். பெண் எஸ்.பி புகாரளிக்க சென்னை செல்லும் வழியில் செங்கல்பட்டில் தடுத்து நிறுத்திய எஸ்.பி.கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தார்.
அதனை தொடர்ந்து இவ்வழக்கில் ஜாமீன் கோரி டிஜிபி ராஜேஷ் தாஸ் தரப்பு வழக்கறிஞர் தினகரன் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
30 நாட்களுக்குள் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரியா
