பாலியல் வழக்கில் முன்னாள் ஐ.ஜி முருகன் மீதான பிடிவாரண்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் ஐ.ஜி முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று முருகன் தாக்கல் செய்த வழக்குகளை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தன.
இந்தநிலையில் கடந்த 22ஆம் தேதி பாலியல் வழக்கில் ஆஜராகுமாறு முருகனுக்கு சைதாபேட்டை பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
அப்போது, வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நீதிமன்றமாக செல்லும் முன்னாள் ஐ.ஜி முருகன் விசாரணைக்கு மட்டும் ஏன் ஆஜராகவில்லை என்று கேள்வி எழுப்பியதுடன் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி சுல்தான் முன் முன்னாள் ஐ.ஜி முருகன் இன்று(நவம்பர் 25) ஆஜரானார்.
இதையடுத்து அவருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது. நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அதானி யாரை சந்தித்தார்?: டென்ஷனாகி ஸ்டாலின் சொன்ன பதில்!
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்த உதவி… காப்பாற்றியவர்களுக்கு ரிஷப் பண்ட் செய்த காரியம்!