ADVERTISEMENT

பிரபல ஸ்குவிட் கேம் நடிகர் மீது பாலியல் புகார்!

Published On:

| By Kalai

நெட்பிளிக்ஸ்சில் வெளிவந்த பிரபல  தொடரான ‘ஸ்குவிட் கேம்’-இல் நடித்த முதியவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.

தென்கொரிய நாட்டைச் சேர்ந்தவர் ஓ யோங்-சு.  இவர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்குவிட் கேம் என்ற வெப் சீரிசில் பிளேயர் 001 என்று பிரபலமாக அறியப்பட்டவர்.

ADVERTISEMENT

78 வயதான ஓ யோங் சு 2017 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதாகக் கூறி இவர் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நடிகர் ஓ யோங்-சு மீது குற்றம்சாட்டி அந்த பெண், கடந்தாண்டு டிசம்பர் மாதம் புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி முடித்துவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

தற்போது, பாதிக்கப்பட்டவரின் வேண்டுகோளை ஏற்று, வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

Sexual complaint against famous Squid Game actor

ஆனால் இந்த குற்றச்சாட்டை ஓ யோங் சு முற்றிலும் மறுத்துள்ளார். ஒரு இடத்தில் வழிகாட்டுவதற்காக அந்தப் பெண்ணின் கையைப் பிடித்தேன். ஆனால் அதற்காக மன்னிப்பும் கேட்டுவிட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து ஓ யோங் நடித்த விளம்பரங்களின் ஒளிபரப்பை நிறுத்த தென்கொரிய கலாச்சார அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

50 வருடங்களாக நடிப்புத் துறையில் இருந்து வரும் ஓ யோங்-சு, ஸ்குவிட் கேம் மூலம்தான் உலகம் முழுவதும் பிரபலமானார்.

இவர் பல்வேறு தென்கொரிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். 78 வயதான ஓ யோங்-சு ஸ்குவிட் கேம் தொடருக்காக சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார்.

இந்த விருதை பெற்ற முதல் தென்கொரிய நடிகர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார். தற்போது இவர் மீதான பாலியல் வழக்கு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கலை.ரா

“இனி யாரையும் இழக்கக்கூடாது”: முதல்வர் வேண்டுகோள்!

கமலுக்கு விஜய்சேதுபதி தந்த முத்தம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share