ADVERTISEMENT

நந்தனம் அரசு கல்லூரி கேண்டீனில் இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை- 3 பேர் கைது

Published On:

| By Pandeeswari Gurusamy

Sexual complaints committee Order to the central government

நந்தனம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டீனில் பணியாற்றி வந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் கேண்டீனில் புதுக்கோட்டையைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்தக் கேண்டீனில் அரியலூரைச் சேர்ந்த 22 வயது பெண் கடந்த 20 நாட்களாக பணியாற்றி வந்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில், கேண்டீனில் பணியாற்றிய குணசேகர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இளம் பெண் அங்கு பணியில் இருந்த ஒரு காவலாளியிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தக் காவலாளி புகார் அளித்தார்.இதுகுறித்து காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இளம்பெண்ணை கேண்டீன் உரிமையாளர் செல்வம் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகியோர் ஏற்கனவே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதைப் பார்த்த முதியவர் குணசேகரனும் பெண்ணிடம் அத்துமீறியது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் கேண்டீன் உரிமையாளர் செல்வம், அவரது நண்பர் கார்த்திக் மற்றும் குணசேகர் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி தனது எக்ஸ் பதிவில்,நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டீனில் பணிக்கு சேர்ந்த பெண் ஒருவரை, கல்லூரி வளாகத்திலேயே வைத்து கேண்டீன் மாஸ்டர் மற்றும் பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. ஆயிரம் முறை நான் மீண்டும் மீண்டும் கூறிவருவதை போல திமுக ஆட்சியில் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிப்போயுள்ளதையே
இந்த தொடர் சம்பவங்கள் அழுத்தமாக நிரூபித்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share