ஸ்வீடனில் செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி!

Published On:

| By christopher

ஸ்வீடன் நாட்டில் உடலுறவு ஒரு விளையாட்டு என்று அங்கீகாரம் அளித்து செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 8ஆம் தேதி முதல் நடக்கிறது.

உடலுறவு என்றாலே, பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விஷயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கான ஒரு போட்டியையும் நடத்த இருக்கிறது ஸ்வீடன்.

ADVERTISEMENT

அதற்கு ஐரோப்பியன் செக்ஸ் சாம்பியன்ஷிப் என பெயரிட்டுள்ள ஸ்வீடன், உடலுறவை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கு போட்டியும் நடத்தும் முதல் நாடு என்ற பெயரை பெற்றுள்ளது.

இந்தப் போட்டி வருகிற 8ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது. பல வாரங்கள் இந்த போட்டி நடத்தப்படும் எனத் தெரிகிறது. மேலும், இதில் பங்கேற்கும் நபர்கள் தினமும் 6 மணி நேரம் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துணையை கவர்தல், உடல் மசாஜ், வாய்வழி பாலியல், உடலுறவு, சகிப்புத்தன்மை என 16 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட இருக்கிறது. 

இந்தப் போட்டியை நடத்த ஸ்வீடன் செக்ஸ் பெடரேஷன் ஏற்பாடு செய்துள்ளது. 70 சதவிகிதம் வாக்குகள் பார்வையாளர்கள் அளிப்பார்கள். 30 சதவிகிதம் வாக்குகள் நடுவர்கள் அளிப்பார்கள்.

ADVERTISEMENT

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள ஐரோப்பியாவின் பல நாடுகளில் இருந்து 20 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். 

ஸ்வீடனின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலர் எதிர்ப்பு கருத்துகளையும், சிலர் ஆதரவான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

கிச்சன் கீர்த்தனா: எதைச் சாப்பிட்டாலும் ஒத்துக்க மாட்டேங்குது… என்ன செய்யலாம்?

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share