ADVERTISEMENT

30 கதாபாத்திரங்கள் கொண்ட ‘செவ்வாய்கிழமை’

Published On:

| By Kavi

இயக்குநர் அஜய் பூபதியின் ‘RX 100’ திரைப்படம் தெலுங்கு, இந்தி சினிமா ரசிகர்களிடையே  வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக அவரது இயக்கத்தில் தயாராகி வரும் ‘செவ்வாய்கிழமை’  படம் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் விவாதப்பொருளாக மாறியுள்ளது

RX 100‘ படத்தின் மூலம் பிரபலமான  பாயல் ராஜ்புத் இந்தப் படத்தில் ஷைலஜா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தின் முதல் பார்வை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

போஸ்டரில் கதாநாயகியின் தோரணையும் அவரது கண்களில் கசப்பான உணர்ச்சியும், விரலில் இருக்கும் பட்டாம்பூச்சியும் முதல் பார்வையை திரும்பி பார்க்க வைக்கிறது.

முத்ரா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது.

ADVERTISEMENT

படத்தின்  முதல் பார்வை குறித்து இயக்குநர் அஜய் பூபதி கூறுகையில்,

“’செவ்வாய்கிழமை’ திரைப்படம் 90களில் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் திரில்லர். பாரம்பரியமான நம் மண்ணின் தன்மையுடன் கூடிய காட்சிகள் மற்றும் உணர்வுகள் இந்தப் படத்தில் இருக்கும்.  

ADVERTISEMENT
Sevvai Kizhamai Movie First Look

திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பாயலின் கதாபாத்திரம் நீண்ட நாட்களுக்கு நினைவில் இருக்கும்.

இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத புதிய வகை ஜானரில் இந்தப் படம் இருக்கும். கதையில் 30 கதாபாத்திரங்கள் உள்ளன மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியமானது” என்றார்.

தயாரிப்பாளர்கள் ஸ்வாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா ஆகியோர் கூறுகையில்,

‘RX 100’  படத்தின் சிந்து போல, அஜய் பூபதியின் ‘செவ்வாய்கிழமை’ ஷைலஜாவும் நீண்ட நாட்கள் ரசிகர்கள் நினைவில் இருக்கும்.

நாங்கள் 75 நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ளோம். படத்தை உயர் தொழில்நுட்ப தரத்தில் உருவாக்குகிறோம். படத்தின் கடைசி ஷெட்யூலை அடுத்த மாதம் முடிக்க திட்டமிட்டுள்ளோம். கதை அற்புதமாக உள்ளது. இது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

கந்தாரா‘ புகழ் அஜனீஷ் லோக்நாத் இந்தப் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இராமானுஜம்

சீன அமைச்சர் வருகை: எல்லை பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமா?

சொதப்பிய மும்பை: குஜராத் அபார வெற்றி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share