மிக்ஜாம் புயல் காரணமாக இடைவிடாது கொட்டிய கனமழையால் மீனம்பாக்கம் பகுதியில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் இன்று (டிசம்பர் 4) சென்னை விமான நிலையத்தில் ஓடு தளம் முழுதும் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் தரையிறங்க வேண்டிய 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
#Chennai airport #cyclone #cyclonealert #cyclonemichaung pic.twitter.com/lNRVuD83UL
— Shabbir Ahmed (@Ahmedshabbir20) December 4, 2023
மேலும் சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால் மீனம்பாக்கம் விமான நிலையம் வரை வந்த விமானங்கள் வானத்திலேயே வட்டமடித்து பிறகு திரும்பிச் செல்கின்றன.
மேலும் சென்னையில் இருந்து புறப்படுவதாக திட்டமிட்டப்பட்டிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால், விமானத்தில் ஏறி அமர்ந்த பயணிகள் மீண்டும் இறக்கிவிடப்படுகின்றனர். விமான ஓடுதளத்தில் மட்டுமல்லாமல், விமான நிலையத்துக்கு உள்ளேயும் மழை நீர் தேங்கியுள்ளது.

விமான நிலைய ஓடுபாதை முழுதுவதும் நிரம்பியிருக்கும் மழை நீர் அகற்றப்படும் வரையில் விமான நிலையம் தற்காலிகமாய் மூடப்பட்டிருக்கிறது.
கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொள்ள முன் பதிவு செய்திருக்கும் பயணிகள், மழையை கருத்தில் கொண்டு தங்கள் பயணத் திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
–வேந்தன்
மிசோரம் தேர்தல்: வெற்றி கணக்கை துவங்கிய ஜோரம் மக்கள் இயக்கம்
