தமிழகத்தில் 7 புதிய நகராட்சிகள் உதயம்… அரசிதழ் வெளியீடு!

Published On:

| By Selvam

7 புதிய நகராட்சிகளை உருவாக்கி தமிழக அரசு இன்று (மார்ச் 30) அரசாணை வெளியிட்டுள்ளது. seven new corporation created

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் நகர்ப்புற மக்கள் தொகை 48.45 சதவீதமாகவும் தற்போது நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் தொகை சதவீதம் மேலும் உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

எனவே, மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலை கருத்திற்கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் எழுகின்றது.

அரசு நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நகர்ப்புறத்தினை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நகரமயமாக்கலின் தன்மையினை பொறுத்து, கிராம ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைத்தும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும். நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்துதல் மற்றும் மறுசீரமைப்பு மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்தநிலையில், தமிழகத்தில் புதிதாக போளூர், செங்கம், சங்ககிரி, அவிநாசி, கோத்தகிரி, கன்னியாகுமரி மற்றும் பெருந்துறை ஆகிய புதிய 7 நகராட்சிகளை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் 13 புதிய நகராட்சிகள், 25 பேரூராட்சிகளை உருவாக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. seven new corporation created

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share