தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
- சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்திக்
- பொருளாதாரம், புள்ளியியல்துறை ஆணையர் ஜெயா
- சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார்
- டிட்கோ தலைவர் சந்தியா வேணுகோபால் சர்மா
- நிதித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன்
- மத்திய அரசுப் பணியில் சர்வேயர் ஜெனரல் ஹிதேஷ் குமார் மக்வானா
- பள்ளி கல்வித் துறை செயலாளர் சந்திரமோகன் ஆகிய 1995-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் ‘தலைமைச் செயலாளர்’ அந்தஸ்தில் ’கூடுதல் தலைமைச் செயலாளர்களாக’ பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

