சினிமா நடிகர்களை போலவே, சீரியல் நடிகர்களுக்கும் ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது. காரணம் சமூக வலைத்தளம் வந்த பிறகு தங்களது அன்றாட வாழ்க்கையை சீரியல் நடிகர்கள் தொடர்ந்து பதிவிடுவதால் ரசிகர்கள் அவர்களை ஆர்வமுடன் பின் தொடர்கின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை பிரியங்கா நல்காரி. தனது குடும்ப பாங்கான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர் சீரியலுக்கு வருவதற்கு முன்பு ஒரு சில படங்களில் தோன்றியுள்ளார். அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது ரோஜா சீரியல் தான்.
பிரியங்கா நல்காரி தனது நீண்ட நாள் காதலரான ராகுல் வர்மாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மலேசியாவில் சிம்பிளாக நடந்து முடிந்தது.
திருமணத்திற்கு பின்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘நளதமயந்தி’ என்று சீரியலில் நடித்து வந்தார். இந்நிலையில் பிரியங்கா நல்காரி சந்தோஷமான விஷயம் ஒன்றை தனது Youtube பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தனது கணவருக்காக மிகப்பெரிய ரெஸ்டாரன்ட் ஒன்றை திறந்துள்ளார். பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருக்கும் இந்த ரெஸ்டாரண்டின் பூஜை வேலைகள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.
நடிகைகள் பலரும் தாங்கள் நன்றாக சம்பாதிக்கும் காலத்தில், சேர்த்த பணத்தை பிசினஸில் முதலீடு செய்வது வழக்கம் தான். ஆனால் நடிக்க வந்த சில வருடங்களிலேயே இவ்வளவு பெரிய ரெஸ்டாரண்டை ஆரம்பித்திருக்கும் பிரியங்கா நல்காரிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மூன்று ஆண்டுகள் நிறைவு : வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்
ஜூனில் வெளியாகும் ராயன்.. ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது?
”யானைகளின் வழித்தடம் என எங்கள் நிலங்களைப் பறிக்கிறார்கள்” : விவசாயிகள் வேதனை!
பியூட்டி டிப்ஸ்: நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை தடவை தலை வாருகிறீர்கள்?