வெப்பம் நீடிக்குமா? மழை குளிர்விக்குமா? வானிலை மைய அப்டேட் இதோ!

Published On:

| By Minnambalam Login1

september 17 weather

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே வெப்பநிலை இயல்பை விட   அதிகமாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்கு (செப்டம்பர் 17 மற்றும் 18) வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (செப்டம்பர் 17) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில்,

“கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்ச வெப்பநிலையாக  மதுரை விமான நிலையத்தில் 40.3° செல்சியஸும் , ஈரோட்டில் 19.6° செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையாகவும் பதிவாகியுள்ளது.

செப்டம்பர் 17 முதல் 23 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்

இன்று (செப்டம்பர் 17), மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

செப்டம்பர் 18 முதல் 21 வரை, மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்

செப்டம்பர் 17 முதல் 21 வரை, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்

இன்று (செப்டம்பர் 17), தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

”நடக்காத விஷயங்களை பரப்பாதீங்க” : குமுறும் குக் வித் கோமாளி மணிமேகலை

திருமணமான 40 நாளில் 6 முறை மட்டுமே குளித்த கணவர்… நாற்றம் தாங்காமல் மனைவி செய்த சம்பவம்!

பக்கிங்ஹாம் மர்டர்ஸ் : விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share