துரைமுருகன் கொண்டு வந்த தனி தீர்மானம்: சட்டமன்ற வாயில்கள் மூடல்!

Published On:

| By Kavi

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 10) ஆளுநருக்கு எதிராக தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவை முன்னவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்,

ADVERTISEMENT

“சட்டமன்ற பேரவை விதி 92/(vii)-ல் அடங்கியுள்ள conduct of any governor எனும் பதம், use the governors name for the purpose of influencing a debate எனும் பதம் மற்றும் விதி 287ல் அடங்கியுள்ள Provided however that they above provisions are not be invoked to suspend rule 92(vii) எனும் பதம் ஆகியவற்றின் பயன்பாடுகளை நிறுத்தி வைத்து இன்றைய நிகழ்ச்சி நிரலில் இனம் 4ல் குறிப்பிடப்பட்டுள்ள அரசினர் தனி தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று முன்மொழிந்தார்.

இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது என்று அறிவித்த சபாநாயகர் அப்பாவு, உடனடியாக, அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது எனவும் அறிவித்தார்.

ADVERTISEMENT

அப்போது பேரவையின் அனைத்து நுழைவாயில்களையும் மூடவும் அவை காவலர்களை கேட்டுக்கொண்டார் அப்பாவு.

வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்ய சபாநாயகர் அப்பாவுவிடம் பாஜக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ADVERTISEMENT

இன்றைய கூட்டத்தில் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் பங்கேற்காத நிலையில், எம்.ஆர். காந்தி, சி.சரஸ்வதி உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்னதாக அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்த தீர்மானத்துக்கு 144 பேர் ஆதரவு தெரிவித்தனர். 2 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

தொடர்ந்து அவை கதவை திறந்துவிட சொன்ன சபாநாயகர் அப்பாவு, முதல்வர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வர அனுமதித்தார்.

பிரியா

டிஜிட்டல் திண்ணை: டெல்லி விருந்து… முருகனுக்கு மோடி கொடுத்த சிக்னல்!

ஷர்மிகா மீது மேலும் 2 புகார்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share