டாஸ்மாக் தலைமையகத்தில் தொடரும் ரெய்டு : அண்ணாமலை – செந்தில்பாலாஜி மோதல்!

Published On:

| By christopher

senthilbalaji react for annamalai counter

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் 3வது நாளாக அமலாக்க துறை இன்று (மார்ச் 8) சோதனை நடத்தி வரும் நிலையில், தன்னை விமர்சித்த அண்ணாமலையை, அரசியல் கோமாளி எனக் கூறியுள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. senthilbalaji react for annamalai counter

சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இரவு பகலாக 3வது நாளாக அமலாக்க துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

உலகமகா உத்தமரா? senthilbalaji react for annamalai counter

இந்த ரெய்டு தொடர்பாக நேற்று பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”சாராய அமைச்சர் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்தால் அது எப்படி திசை திருப்புவதாகும்? டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கடந்த ஆண்டே வருமான வரித்துறை தெரிவித்தது. சாராய அமைச்சர் எல்லாம் உலகமகா உத்தமரா? அவரை யாரும் தொடமுடியாதா? இதில் திசைதிருப்ப ஒன்றுமில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து கோவையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அண்ணாமலையின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அரசியல் கோமாளி! senthilbalaji react for annamalai counter

அதற்கு அவர், ”அமலாக்கத்துறையின் ரெய்டு முடிந்த பிறகு பதில் சொல்கிறேன். என்னிடம் அரசியல் கோமாளியின் கேள்விகளை முன்வைக்காதீர்கள் என்று முன்பே கூறியுள்ளேன். அவர் ஒரு நிலைப்பாட்டில் இருந்ததே இல்லை. தெளிவான கருத்தை ஒருநாளும் முன்வைத்ததும் இல்லை” என்று பதில் அளித்தார்.

டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம்! senthilbalaji react for annamalai counter

இதற்கிடையே அமலாக்கத்துறையின் ரெய்டுக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “ஒன்றிய பாஜக அரசு, அமலாக்க துறை வருமானவரி துறை உள்ளிட்ட அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற அமைப்புகளை பயன்படுத்தி எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை என்பதன் பெயரில் தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதையும் தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை வலிந்து திணிப்பதையும், பள்ளி கல்வித்துறைக்கும் பேரிடர் நிவாரண பணிக்கும் மற்றும் வேலை உறுதியளிப்பு திட்ட ஊதிய பாக்கி தொகையினையும் வழங்க மறுத்து வரும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை எதிர்த்து தமிழ்நாடு ஒருமுகமாக எதிர்த்து வரும் சூழலில் அமலாக்க துறையின் நடவடிக்கை ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் டாஸ்மாக் தலைமை அலுவலகம், சென்னை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம், மதுபானங்கள் வைப்பு மைய குடோன், முன்னாள் மதுவிலக்கு இணை ஆணையர் வீடு என அரசு அலுவலகங்களில் அமலாக்க துறை சோதனையில் ஈடுபட்டு மிரட்டும் செயலில் ஈடுபட்டதை கடுமையாக ஆட்சேபிக்கிறது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share