“விரைவில் செந்தில் பாலாஜி வெளியே வருவார்” : கரூரில் உதயநிதி உறுதி!

Published On:

| By Kavi

விரைவில் செந்தில் பாலாஜி வெளியே வருவார் அதற்கான சட்டப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 4) அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கரூரில் பிரச்சாரம் செய்தார்.

கரூரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் எம்.பி.ஜோதிமணியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “வாக்குப்பெட்டியில் 4 ஆவது சின்னமாக இருக்கும் கை சின்னைத்தில் ஓட்டு போட்டு எம்.பி.ஜோதிமணியை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.

5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். அப்படி செய்தால் கரூர் தொகுதிக்கு தேவையான அனைத்தையும் செய்து தருகிறேன்” என்று உறுதி அளித்தார்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “செந்தில் பாலாஜி இந்த தொகுதியில் நடத்தாத நிகழ்ச்சியே இல்லை. இ.டி, ஐ.டி ரெய்டு என அதிமுகவினரை பாஜக பயமுறுத்தி வைத்திருந்தது.

இப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மிரட்டி உள்ளே வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் சட்டப்போராட்டத்தை நடத்தி விரைவில் வெளியே வந்து, தேர்தல் வெற்றி விழாவில் உங்களை எல்லாம் சந்திப்பார்.

அதற்கான சட்டப்போராட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலினும், செந்தில் பாலாஜியும் செய்து கொண்டிருக்கிறார்கள்” என கூறினார்.

இதனிடையே இன்று (ஏப்ரல் 4) செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏப்ரல் 15ஆம் தேதி வரை 31ஆவது முறையாக நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரசிகர்களைக் கவர்ந்ததா?- திரை விமர்சனம்!

25 ஆண்டுகள் முதலமைச்சர்…அஸ்திவாரத்தை அசைக்கும் பாஜக…ஒரிசாவைக் கைப்பற்றப்போவது யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share