இரவில் டெல்லி…பகலில் சட்டமன்றம் : ED வழக்கில் செந்தில் பாலாஜி மூவ்!

Published On:

| By vanangamudi

Senthil Balaji visited Delhi

மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் பயணமாக டெல்லி சென்று திரும்பியுள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சென்று வந்துள்ளார். Senthil Balaji visited Delhi

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மற்றும் மதுபான ஆலைகளில் மார்ச் 6,7,8 தேதிகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையின் முடிவில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்தது.

ஆனால் இதை செந்தில் பாலாஜி திட்டவட்டமாக மறுத்தார்.

“எந்தவித முகாந்தரமும் இல்லாமல் டாஸ்மாக் நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் நடத்தப்பட்ட ரெய்டு எந்த ஆண்டு பதியப்பட்டது, எந்த முதல் தகவல் அறிக்கை (FIR) அடிப்படையில் நடத்தப்பட்டது எனக் கூறவில்லை” என்று விளக்கமளித்தார் செந்தில் பாலாஜி.

மீண்டும் செந்தில் பாலாஜிக்கு செக் வைக்க அமலாக்கத் துறை இதுபோன்று ரெய்டு நடத்துவதாக கூறப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி திடீரென டெல்லி சென்று வந்துள்ளார்.

இதுதொடர்பாக செந்தில் பாலாஜி வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, ‘டாஸ்மாக் ஊழல் வழக்கு சம்பந்தமாக அமலாக்கத் துறை வழக்குகளை எதிர்கொள்ள உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது. அதில் ஒருவர் பாஜக ஆதரவாளர். இந்த சந்திப்புக்கு பிறகு செந்தில் பாலாஜி நம்பிக்கையுடன் இருக்கிறார்” என்கிறார்கள்.

நேற்று இரவில் டெல்லியில் இருந்த செந்தில் பாலாஜி இன்று காலை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ளார்.

ஏற்கனவே தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை செந்தில் பாலாஜி எதிர்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. hil Balaji visited Delhi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share