மறுவிசாரணை கோரும் செந்தில் பாலாஜி

Published On:

| By christopher

Senthil Balaji seeks retrial in his ed case

அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய வழக்கில் இன்று (ஏப்ரல் 15) உத்தரவிட இருந்த நிலையில், வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அதனை ஏற்று இந்த வழக்கை வரும் 17ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் விசாரணை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் அமலாக்கத் துறை வழக்கில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய மனு மீது இன்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தீர்ப்பளிக்க இருந்தார்.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கெளதம், ”வங்கி காசோலைகள் சம்பந்தமாக கூடுதல் விவரங்கள் எங்களுக்கு தெரிய வந்துள்ளது. அதையும் நாங்கள் முன்வைக்க வேண்டும்.  எங்கள் தரப்பில் இருந்து அதிகமான கருத்துகள் சொல்ல வேண்டியுள்ளது. எனவே இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

ADVERTISEMENT

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி, இந்த மனுவின் மீதான விசாரணையை வரும் ஏப்ரல் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

32-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

ADVERTISEMENT

மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு  ஆஜரானார்.

வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில்,  செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 17-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 32-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மின்னம்பலம் மெகா சர்வே: கிருஷ்ணகிரி… சிகரம் ஏறுவது யார்?

’ஒரே நாடு ஒரே தலைவர்’ என மக்களை அவமதிக்கிறது பாஜக : ராகுல் காந்தி

நடிகை வரலட்சுமி நிச்சயதார்த்தம்…. முதல்முறையாக மனம் திறந்த விஷால்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share