செந்தில் பாலாஜி மனு : அமலாக்கத் துறைக்கு உத்தரவு!

Published On:

| By Kavi

வங்கி ஆவணங்களை வழங்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த வழக்கு தொடர்புடைய வங்கி ஆவணங்களை கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “நீதிமன்ற உத்தரவுபடி வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால் விடுபட்ட ஆவணங்களை வழங்க வேண்டும். கரூர் சிட்டி யூனியன் வங்கியில் உள்ள கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை அமலாக்கத் துறை வழங்க உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று ஏற்கனவே சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அதன்படி இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பித்த நீதிபதி அல்லி, வங்கி ஆவணங்கள் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார். கரூர் சிட்டி யூனியன் வங்கி கிளையின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில் பாலாஜிக்கு வழங்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க கேட்டு தாக்கல் செய்த மனுவை ஜூலை 10ஆம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தார் நீதிபதி அல்லி.

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், 44ஆவது முறையாக ஜூலை 10ஆம் தேதி வரை காவலை நீட்டித்தும் உத்தரவிட்டார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மகளிர் ஆசிய கோப்பை 2024: ஹர்மன்ப்ரீத் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!

ஏரி, குளங்களில் இருந்து இலவசமாக மண் எடுக்க அனுமதி: விண்ணப்பிப்பது எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share