செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கு: இன்று விசாரணை!

Published On:

| By Selvam

senthil balaji madras high court

சட்டவிரோதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை ஜூன் 14-ஆம் தேதி கைது செய்தது. தற்போது செந்தில் பாலாஜி புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார். அவரை சட்டவிரோதமாக அமலாக்கத்துறை கைது செய்ததாக மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. இதனால் செந்தில் பாலாஜி வழக்கு மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் ஜூலை 14-ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி சி.வி.கார்த்திகேயன், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் அதற்கான தேதியை நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்கரவர்த்தி அமர்வு அறிவிப்பார்கள் என்று தீர்ப்பு வழங்கினார். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

இந்தநிலையில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மதியம் 2.15 மணிக்கு ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை எந்த தேதியிலிருந்து விசாரிக்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

செல்வம்

அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்: அரசு பதிலளிக்க உத்தரவு!

ADVERTISEMENT

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share