செந்தில் பாலாஜி விவகாரம் : ED கேவியட் மனு தாக்கல்!

Published On:

| By Kavi

Senthil Balaji issue ED filed caveat petition

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில்  அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஒரு மாத சட்ட போராட்டத்துக்கு பின் நேற்று (ஜூலை 14) அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி,  செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜியின் சிகிச்சை முடிந்ததும் அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று அனுமதி வழங்கினார்.

ADVERTISEMENT

இந்த தீர்ப்பு குறித்து செந்தில் பாலாஜி வழக்கறிஞர் சரவணன் கூறுகையில்,  “வரும் 24ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது இந்த தீர்ப்புகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். பின்னர் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதியான முடிவை எடுக்கும்” என்றார்.

இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளது.

ADVERTISEMENT

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி உச்ச நீதிமன்றத்துக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

பிரியா 

மாவீரன் முதல் நாள் வசூல் எவ்வளவு?

காமராஜர் 121வது பிறந்தநாள் விழா கோலாகலம்: தலைவர்கள் மரியாதை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share