மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிஎம்எல்ஏ சட்டத்தில் அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியை ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
அதுபோன்று ஜூன் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரை காவலில் எடுக்க முடியவில்லை என்று அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மெமோ தாக்கல் செய்தது.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், இதுதொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பைபாஸ் சர்ஜரி முடிந்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி காணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து அமலாக்கத் துறையின் வேண்டுகோளை ஏற்று, நீதிமன்றக் காவலை வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பிரியா
குவாரிகளுக்கு மூடுவிழா காண துடிக்கும் திமுக: இபிஎஸ் கண்டனம்!
ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் : 200 பேர் கைது!