அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்தி வைப்பு!

Published On:

| By Selvam

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால் விசாரணை நியாயமாக நடைபெறாது என்று அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி ஆளுநர் ரவி நேற்று உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. நாங்கள் அதனை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி எழுதிய கடிதத்தில், “அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கியது தொடர்பாக இன்று (ஜூன் 29) உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். செந்தில் பாலாஜியை நீக்கியது குறித்து அட்டார்னி ஜெனரலிடம் கருத்து கேட்பது விவேகமானதாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்னிடம் அறிவுரை வழங்கினார்.

அட்டார்னி ஜெனரலிடம் இதுதொடர்பாக கருத்து கேட்டிருக்கிறேன். என்னிடமிருந்து அடுத்த தகவல் வரும்வரை செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் உத்தரவை நிறுத்தி வைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

போலி ரசீது ரூ.3.22 கோடி சுருட்டிய கான்ஸ்டபிள்கள்!

அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்க உத்தரவை கவர்னர் நிறுத்தி வைத்த பின்னணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share