செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Published On:

| By Monisha

senthil balaji court custody extended

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 15-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜனவரி 11) உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார்.

ADVERTISEMENT

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு முறையும், சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முறையும், உச்சநீதிமன்றம் ஒரு முறையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தொடர்ந்து செந்தில் பாலாஜி 3வது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைய உள்ளது.

ADVERTISEMENT

இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக ஆஜரானார். அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வுநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தற்போது 15-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

மோனிஷா

ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: சேலத்தில் 300 பேர் கைது!

அன்னபூரணி படத்தால் வெடித்த சர்ச்சை… நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share