ADVERTISEMENT

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 16வது முறையாக நீட்டிப்பு!

Published On:

| By Monisha

senthil balaji custody extended by 16th time

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 16வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜனவரி 22) உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார்.

ADVERTISEMENT

சுமார் 200 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீட்டித்து வருகிறது.

இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 முறையும், உயர்நீதிமன்றத்தில் ஒரு முறையும், உச்சநீதிமன்றத்தில் ஒரு முறையும் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் செந்தில் பாலாஜியின் அனைத்து ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 29 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன்மூலம் 16வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

மோனிஷா

”அயோத்தி ராமர் கோயிலுக்குப் பிறகு என் அடுத்த இலக்கு என்ன?” : மோடியின் முழு உரை!

ராமர் கோயில் திறப்பு விழாவில்… தோனி, ரோஹித், கோலி கலந்து கொள்ளாதது ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share