அறிவாலயத்திலேயே தங்கமணிக்கு ஆட்கள்… செந்தில்பாலாஜியை அதிர வைத்த நாமக்கல்

Published On:

| By Minnambalam Desk

Senthil Balaji consultative meeting

திமுகவில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட மண்டலப் பொறுப்பாளர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் முதற்கட்ட அறிமுக ஆலோசனைக் கூட்டங்களை முடிப்பதில் வேகமாக இருக்கிறார்கள். Senthil Balaji consultative meeting

மண்டலப் பொறுப்பாளார்கள் வந்து சென்ற மாவட்டங்களில் திமுக நிர்வாகிகள் சற்று அதிர்வோடுதான் இருக்கிறார்கள். அவற்றில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த வாரம் ஆய்வு நடத்தி சென்ற நாமக்கல் மாவட்டம் முக்கியமானது.

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம் இப்போது திமுக கட்சி அமைப்பில் நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு என இரு மாவட்டங்களாக இருக்கிறது. Senthil Balaji consultative meeting

Senthil Balaji consultative meeting

நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு ராஜேஸ்குமார் மாவட்டச் செயலாளாராக இருக்கிறார். இவரது மாவட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. Senthil Balaji consultative meeting

ADVERTISEMENT

நாமக்கல் மேற்கு மாவட்டத்துக்கு மூர்த்தி இப்போது மாவட்டப் பொறுப்பாளாராக இருக்கிறார். சமீபத்தில்தான் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த மதுரா செந்தில் மாற்றப்பட்டு மூர்த்தி நியமிக்கப்பட்டார். இவரது மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்தி வேலூர் ஆகிய மூன்று தொகுதிகள் இருக்கின்றன.

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் (மே 18) ஆம் தேதி ஆய்வு நடத்தி முடித்துவிட்டார். அப்போது செந்தில்பாலாஜியை சந்திக்காத நிர்வாகிகள், அந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத நிர்வாகிகள் செந்தில்பாலாஜியை தனியாக சந்திப்பதற்காக கரூருக்கும், சென்னைக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். Senthil Balaji consultative meeting

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்துக்கு செந்தில்பாலாஜியை பொறுப்பாளராக நியமித்தத்தில் இன்னொரு சூட்சுமம் இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில்தான் முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிமுகவின் பெருந்தலையாக இருக்கிறார். நாமக்கல் மாவட்டத்தில் திமுகவில் இருக்கும் முக்கியஸ்தர்களே தங்கமணியோடு அண்ட்கோ போட்டுக் கொண்டு செயல்படுவதாக தகவல்கள் தலைமைக்குச் சென்றது.

Senthil Balaji consultative meeting

இதையடுத்துதான் வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்கமணியையும் அதிமுகவையும் நாமக்கலில் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நாமக்கல்லுக்கு செந்தில்பாலாஜி அனுப்பப்பட்டிருக்கிறார். Senthil Balaji consultative meeting

மற்ற மாவட்டப் பொறுப்பாளர்களைப் போல ஒரு மாவட்டம் என்றால் அதிலுள்ள மூன்று அல்லது நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகளையும் ஒரு சேரக் கூட்டி பெரும் கூட்டமாக நடத்தவில்லை செந்தில்பாலாஜி.

நாமக்கல் சட்டமன்றத் தொகுதி என்றால் அந்தத் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் போதும். மற்ற சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் எதற்காக வாய்ப்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும்? அவரவர் சட்டமன்றத் தொகுதி சம்பந்தப்பட்ட ஆலோசனையின்போது மட்டும் இருந்தால் போதும் என்பதுதான் செந்தில்பாலாஜியின் அணுகுமுறை. Senthil Balaji consultative meeting

இப்படியாக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிவாரியாக நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், “மாவட்டச் செயலாளர் ராஜேஸ்குமாருக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. திமுக நிர்வாகிகளுக்கும் மக்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. இந்த இரண்டு இடைவெளியுமே நமது தேர்தல் வெற்றிக்கு பெரும் ஆபத்தாகும்” என்று கூறியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் இருக்கும் பிரச்சினையை அந்தந்த நிர்வாகிகளிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட செந்தில்பாலாஜி, “மாவட்டச் செயலாளரால் மட்டும் வெற்றி கிடைத்துவிடாது. கிளைக் கழக நிர்வாகி முதல் அனைவரையும் மரியாதையாகவும் கனிவாகவும் நடத்த வேண்டும். ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மட்டுமல்ல… ஒவ்வொரு அணியின் நிர்வாகிகளும் உழைக்க வேண்டும்.

எங்கள் கரூர் மாவட்டத்தில் பெரிய ஒன்றியங்களை எப்போதோ பிரித்துவிட்டோம். நாமக்கல்லில் இன்னும் சில பெரிய ஒன்றியங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் பிரிக்க வேண்டும். ஒன்று கொங்கு வேளாளர் இன்னொன்று ஆங்காங்கே இருக்கும் பிற சமுதாயத்தினருக்கு அளிக்க வேண்டும்.

இந்த முறை குமாரபாளையம் (தங்கமணியின் தொகுதி) நமக்கு கௌரவ பிரச்சினை. அது உள்ளிட்ட அனைத்து தொகுதிகளையும் நாம் ஜெயிக்க வேண்டும். எல்லா தொகுதிகளும் நமக்கு டஃப் ஆகவே இருக்கின்றன.

அதனால் என்னோட வேகத்துக்கு செயல்படுங்க, அப்போதுதான் ஜெயிக்க முடியும். இனியும் தூங்கிக் கொண்டிருக்கக் கூடாது. என்னுடைய வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள் தயவு செய்து பதவியில் இருந்து விலகிவிடுங்க. ஏன்னா தலைவர் என்னிடம் கேட்டிருப்பது வெற்றியை மட்டும்தான்” என்று பேசிச் சென்றிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, அன்றைய ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்காத அமைச்சர் மதிவேந்தன் மற்றும் நாமக்கல் மேற்கு முன்னாள் மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில், முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் உள்ளிட்டவர்கள் செந்தில்பாலாஜியை தனித்தனியாக சந்தித்துள்ளனர்.
செந்தில்பாலாஜியை தனியாக சந்தித்த நிர்வாகிகள் அவரிடம் தங்கமணி பற்றிய முக்கிய விவரங்களைக் கூறியுள்ளனர்.

“இப்போது அதிகாரபூர்வமாக அமைச்சராக இருக்கும் நம்ம மதிவேந்தனை அமைச்சர்னு சொல்லாத திமுக நிர்வாகிகள் இன்னமும் முன்னாள் அமைச்சர் தங்கமணியை அமைச்சர் அமைச்சர்னு வாய் நிறைய கூப்பிடுறாங்க. அந்த அளவுக்கு அவரோட காம்ப்ரமைஸா இருக்காங்க. இதை உங்களாலதான் தடுக்க முடியும்.

தங்கமணிக்கு நாமக்கல்லில் மட்டுமல்ல… அறிவாலயத்திலேயே ஆட்கள் இருக்கிறார்கள். பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதிகளில் சமீப காலத்தில் நமது நிர்வாகிகள் மாற்றப்பட்ட பின்னணியை ஆராய்ந்தாலே இது தெரியும். தங்கமணி அதிமுகவை மட்டுமல்ல திமுகவையும் சேர்த்தே இங்கு நடத்துகிறார்’’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

Thangamani
Senthil Balaji consultative meeting

அப்போது செந்தில்பாலாஜி, ‘இதுவரை இருந்திருக்கலாம். இனி தங்கமணியோடு காம்ப்ரமைஸே கிடையாது. தங்கமணியோடு தொடர்பில் இருக்கும் நிர்வாகிகள் பெயரை எல்லாம் லிஸ்ட் போட்டாகிவிட்டது.

முதல் கட்டமாக தனியாக எச்சரிக்கை விடுக்கிறேன். அதன் பின் தலைவரிடம் சொல்லி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். நீங்கள் நம்பிக்கையா இருங்க. நாம ஜெயிக்கிறோம். நாமதான் ஜெயிக்கிறோம்’ என்று சொல்லியனுப்பியிருக்கிறார்.

செந்தில்பாலாஜி மீண்டும் நாமக்கல் வருவதற்குள் சில அதிரடி மாற்றங்கள் இருக்கலாம் என்கிறார்கள்.

Senthil Balaji consultative meeting
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share