செந்தில் பாலாஜி வழக்கு – நாளை ஒத்திவைப்பு!

Published On:

| By indhu

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம்  ஒத்திவைத்துள்ளது.

செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் ஜாமீன் கேட்டும், அமலாக்கத் துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த மே 6ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபஸ் எஸ் ஓஹா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  இந்த மனு மீது பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று நீதிபதிகள் மே 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில்  இன்று (மே 15) நடைபெற்ற விசாரணையில், செந்தில் பாலாஜி வழக்கின் மீதான விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை நாளை (மே 16) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

 ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை சந்திரா… எந்த சீரியல் தெரியுமா?

பங்குச் சந்தை: விழுவது யார்? எழுவது யார்? எந்த பங்கு வாங்கலாம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share