ஜாமீன் வழக்கில் இழுத்தடிப்பது ஏன்? உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு காட்டம்!

Published On:

| By Selvam

ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு ஜூலை 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில்  செந்தில் பாலாஜியை கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்தநிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மனு உச்சநீதிமன்றத்தில் அபய் எஸ்.ஓஹா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

முன்னதாக கடந்த மே மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை தரப்பில் காலஅவகாசம் கேட்டதால், வழக்கு நீதிமன்ற விடுமுறைக்கு பிறகு ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, ஏஜி மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, “எவ்வளவு நாள் தான் இந்த வழக்கில் அமலாக்கத்துறை காலஅவகாசம் கேட்பார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து ஜூலை 12-ஆம் தேதி அன்று இறுதி வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்த அண்ணாமலை

Share market: பங்குச்சந்தை சரிவு… ஃபோகஸ் செய்ய வேண்டிய பங்குகள் என்னென்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share