அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர் – கோரிக்கை ஏற்க மறுப்பு!

Published On:

| By Kavi

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (செப்டம்பர் 30) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறை செந்தில் பாலாஜி மீது தனியே வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

ADVERTISEMENT

மறுநாள் வெள்ளிக்கிழமை காலை உச்ச நீதிமன்ற உத்தரவுபடி சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

இந்நிலையில் நேற்று மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக பதவியேற்ற செந்தில் பாலாஜி இன்று காலை இரண்டாவது நாளாக அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

ADVERTISEMENT

அதைத்தொடர்ந்து இன்று (செப்டம்பர் 30) பிற்பகல், சட்டவிரோத பணமோசடி வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் ஆஜரானார் செந்தில் பாலாஜி.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் இந்த வழக்கை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதை ஏற்க மறுத்த நீதிபதி, அக்டோபர் 4ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணனுக்கு பிடிவாரண்ட் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

8 ஆண்டுகளுக்கு பிறகு புகார் ஏன்?- சித்திக் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கேள்வி!

யாரும் என்னை பார்க்க வரவேண்டாம் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share