மருத்துவமனையில் அட்மிட்: செந்தில் பாலாஜிக்கு என்னாச்சு?

Published On:

| By Selvam

நெஞ்சு வலி காரணமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இன்று (ஜூலை 21) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.

இந்தநிலையில், இன்று மதியம் உணவு சாப்பிட்ட பின் நெஞ்சு வலிப்பதாக சிறைத்துறை அதிகாரிகளிடம் செந்தில் பாலாஜி கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அட்மிட் செய்ய பரிந்துரை செய்துள்ளனர். மருத்துவர்களின் பரிந்துரையை அடுத்து செந்தில் பாலாஜி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதுதொடர்பாக மருத்துவமனை வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “கடந்த வாரம் செந்தில் பாலாஜிக்கு ரத்தம் அழுத்தம் அதிகரித்தது. இதனால் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவனையில் சிகிச்சை பெற்றார். இந்தநிலையில், இன்று மதியம் அவருக்கு ஹார்ட் பீட் அதிகரித்ததால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்” என்கிறார்கள்.

செல்வம் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரூ.2,391 கோடியில் பேரூராட்சி மேம்பாட்டுத் திட்டம்: லிஸ்ட் போட்ட தமிழக அரசு!

நீட் தேர்வு பிரச்சனை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் டி.ஆர்.பாலு முக்கிய கோரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share