சேந்தமங்கலம் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

By Kavi

|

Published on 14 Apr 2026, 1:06 PM

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

சேந்தமங்கலம் வாக்காளர்கள்

ADVERTISEMENT

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

சேந்தமங்கலம்.. திமுகவின் பொன்னுசாமி 2021-ல் வெற்றி பெற்ற தொகுதி.

இந்த முறை திமுகவின் வேட்பாளராக பூமலர் போட்டியிடுறாங்க.. அதிமுகவில் சந்திரசேகரன் களம் காண்கிறாங்க. 1996, 2016-ல் சந்திரசேகரன் இந்த தொகுதியில ஜெயிச்சு எம்.எல்.ஏ.வாக இருந்தவர்..

அதிமுக 8 முறை, திமுக 5 முறை வென்ற தொகுதி.

2011-ல் தேமுதிக இங்கே வெற்றி பெற்றது. திமுகவில் போட்டியிடும் பூமலர் புதுமுகமாக இருந்தாலும் அவர் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுசாமியின் மகள்.

தவெகவில் சந்திரசேகா், நாம் தமிழா் கட்சியில் பொன்னுமணி களத்தில் இருக்காங்க.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக -36 %
அதிமுக -38%
தவெக-17%
நாதக-8% வாக்குகள் பெறும்

போட்டி மிக கடுமையாக இருக்கிறது. அதிமுக வேட்பாளர் சந்திரசேகரன் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? நாமக்கல் | Namakkal | Minnambalam Mega Survey Results 2026

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel