’மொழிப்போர்’ தளபதி திமுக மூத்த முன்னோடி எல்.கணேசன் (எ) எல்ஜி காலமானார்

Published On:

| By Mathi

L. Ganesan

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்ஜி என்றழைக்கப்படும் எல்.கணேசன் (வயது 92) இன்று தஞ்சாவூரில் காலமானார்.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் எல்.கணேசன்.
1965-ம் ஆண்டு இந்தி திணிப்பு எதிர்ப்பு போரின் தளபதிகளில் ஒருவராக களம் கண்டவர் எல்.கணேசன். இந்திரா காந்தி அமல்படுத்திய எமர்ஜென்சியின் போது சிறைக் கொடுமைகளை எதிர்கொண்டவர். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட முத்தரசநல்லூர் சதி வழக்கையும் சந்தித்தார் எல்.கணேசன்

ADVERTISEMENT

தமிழக சட்டமன்ற உறுப்பினராக 3 முறையும் நாடாளுமன்ற உறுப்பினராக 2 முறையும் பதவி வகித்தவர் எல்.கணேசன். தமிழக சட்டமேலவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் எல்.கணேசன்.

வைகோ தலைமையிலான மதிமுகவில் சிறிது காலம் செயல்பட்டார். பின்னர் திமுகவுக்கே திரும்பினார். கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருந்த நிலையில் எல்.கணேசன் இன்று காலமானார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share